மாவட்ட செய்திகள்
குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்திய நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் பெண் காவல் ஆய்வாளர் கண்மணி!
![]()
அதிரடி நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்த தென் மண்டல ஐஜி மற்றும் குமரி எஸ்பி ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு!
கன்னியாகுமரி,
குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கடந்த பெப்ரவரி மாதம் 12ம் தேதி முன்னாள் தனிப்பிரிவு ஆய்வாளராகவும் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆய்வாளர் கண்மணி வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் சிக்கியது. மேலும் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமாக அதிக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. இவர் குமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் சேவியர் பாண்டியன். இவர் குமரி மாவட்ட நீதிமன்றத்தில் உதவி குற்றவியல் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இவரும் பத்து வருடங்களாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் குமரிமாவட்டத்தில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வந்த நிலையில் தனிப் பிரிவு ஆய்வாளர் பதவியை பயன்படுத்தி ஆய்வாளர் கண்மணி பல்வேறு கனிம வள கடத்தல் மற்றும் முக்கிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பல தருணங்களில் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தது மட்டுமின்றி பல்வேறு குற்ற சம்பவங்களில் கூட புலனாய்வுகள் செய்யும் அதிகாரிகளின் புலனாய்வில் தலையிட்டு முக்கிய குற்றவாளிகளை விடுவிக்க தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் பெற்று அவர்களை விடுவித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. பான்பராக் புகையிலை கடத்தல் போதை மருந்து கடத்தல் கஞ்சா கடத்தல் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களும் குமரி மாவட்டத்தில் அரங்கேறி வந்தது. இதற்கு ஒருபடி மேலே போய் ஆய்வாளர் கண்மணியின் கணவரான சேவியர் பாண்டியன் கூட்டுச் சேர்ந்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக பரிந்து பேசி தனது மனைவியான ஆய்வாளர் கண்மணிக்காக லஞ்சம் வாங்கும் செயலில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இவற்றையெல்லாம் உறுதிப்படுத்தும் விதமாக உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த எஸ் பிக்கள் ஸ்ரீ நாதா மற்றும் பத்ரி நாராயணன் ஆகியோர் ஆய்வாளர் கண்மணிக்கு அதிக அதிகாரம் கொடுத்து பாலியல் வழக்குகள் மற்றும் கனிமவள கடத்தல்கள் மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் நிறுத்திவைக்க என பல்வேறு சட்டவிரோத செயல்களையும் அரங்கேற்றியதாகவும் அதற்கு உயரதிகாரிகளை தனது கைக்குள் வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது. எஸ்பி பத்திரி நாராயணன் மகளுக்கு பிறந்தநாள் விழாவின்போது 9 சவரன் நகை அணிவித்ததாகவும் அதைப்போல முன்னர் குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த எஸ்பி மற்றும் தற்போது ஓய்வு பெற்று விட்ட அப்போது குமரி மாவட்ட ஏடிஎஸ்பியாக பணிபுரிந்தவர் ஆகியோர் ஆடி கார்கள் லஞ்சமாக பெற்றதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆய்வாளர் கண்மணி என்று கூறப்பட்டு வந்தது. மேலும் காவல்துறை பெண் உயர் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தமிழ் கடவுள் பெயரை கொண்ட அதிகாரி ஒருவர் ஆய்வாளர் கண்மணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு சோதனை நடத்தியதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்ததும் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவடைந்தவுடன் ஆய்வாளர் கண்மணியை அந்த உயர் ஐபிஎஸ் அதிகாரி தொடர்புகொண்டு குமரி மாவட்டத்தில் சட்ட ஆலோசனைக்கு ஒருவரை தொடர்பு கொள்ள உதவி பிறந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆய்வாளர் கண்மணி குமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்தபோது அடிக்கடி இரவு நேரங்களில் விமானத்தில் திடீர் சென்னை பயணம் சென்று மறுநாள் காலை அலுவலகத்துக்கு வந்ததாகவும் உயர் அதிகாரிகளுக்கு சிறிய மான்கள் மூலம் “சிறப்பு கவனிப்பு” நடத்திட அழைத்து சென்று வந்ததாகவும் பெயர் கூற விரும்பாத முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவல் ஆய்வாளர்களிடம் உயரதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்வதால் தான் அவர்கள் சட்ட விரோதமாகவே காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய சம்பவங்கள் அனைத்தும் அவற்றை இருப்பதாகவே அமைந்து உள்ளது. குமரி மாவட்டத்தில் காவல்துறை வட்டாரத்தில் பெரும் தாதாவாக உலாவி வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் சோதனை ஆய்வாளர் கண்மணிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கும் என்று எதிர்பாராத நிலையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமையகத்தில் இருந்து ஏற்கனவே காவல் உயரதிகாரிகளுக்கு ஆய்வாளர் கண்மணி மற்றும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அனுப்பப்பட்ட அறிக்கை அடிப்படையில் புதிதாக தென்மண்டல ஐஜி யாக பொறுப்பு ஏற்றுள்ள திரு ஆஸ்ரா கார்க் மற்றும் குமரி மாவட்டத்தில் இளம் எஸ்பியாக சுறுசுறுப்புடன் பணியாற்றிட தனது பெற்றோரை வணங்கி பதவியேற்றுள்ள எஸ் பி ஹரிகிரண் பிரசாத் ஆகியோரின் துரித நடவடிக்கை காரணமாக ஆய்வாளர் கண்மணிக்கு பல பலான உயரதிகாரிகளின் ஆதரவு இருந்தும் மேற்படி நேர்மையான ஐஜி மற்றும் எஸ்பி ஆகியோரின் நடவடிக்கையால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட உடனேயே குமரி மாவட்ட எஸ்பி உடனடி நடவடிக்கை எடுத்து குமரி மாவட்ட காவல் பணியிடத்திலிருந்து மின்னல் வேகத்தில் விடுவித்து உத்தரவிட்டார். இதனால் குமரி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் இடத்திலும் குமரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி காவல்துறையில் அதிகார மையமாக வலம் வந்த ஆய்வாளர் கண்மணி குமரி மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதால் மாவட்டமே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளதாக பொதுமக்கள் குதுகலித்து வருவதன் மூலம் தெரிகிறது. இதேபோல குமரி மாவட்ட நீதித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் உதவி குற்றவியல் இயக்குனர் சேவியர் பாண்டியனையும் குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
