மாவட்ட செய்திகள்
சிமெண்ட் கலவை நிறுவனத்தால் வாகன ஓட்டிகள் அவதி!

திருவள்ளூர் மாவட்டம் ,பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட வயலாநல்லூர் பஞ்சாயத்தில் எஸ். பி .ஆர் .கான்கிரீட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சிமெண்ட் கலவை செய்து கட்டும் பணிக்காக எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிறுவனத்திலிருந்து ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று கலவையை ஏற்றிச் செல்வதால் சாலைகளில் கலவை கீழே விழுந்து காற்றில் பறந்து சாலை முழுவதும் தூசி பறந்து புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கண்களில் தூசு படுவதால் அதிக எரிச்சல் உண்டாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக சிரமம் ஏற்பட்டு விபத்துக்குள்ளாகும் நிலைமையும் ஏற்படுகிறது. இந்த கலவை நிறுவனத்தில் கலப்படம் செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த கலவையால் இந்த நிறுவனத்துக்கு அருகாமையில் உள்ள ஏரி, குளங்களில் தேங்கியுள்ள நீர் மாசு படிந்து பொது மக்களுக்கு பயன்படாத வகையில் இருக்கிறது . தற்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை அதிகரித்துவரும் நிலையில் இது போன்ற நிறுவனங்களால் தண்ணீரும் கெட்டுப்போவது மட்டுமில்லாமல் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சுவாசிப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இது போன்ற நிறுவனங்களை சாலை ஓரத்தில் அமைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது. பொதுமக்கள் இந்த நிறுவன உரிமையாளர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் முன்னும் பின்னுமாக பார்க்கின்றனர். பூந்தமல்லி தாசில்தார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ,ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு மாதாமாதம் கப்பம் கட்டி வருவதாக கூறுகிறார்கள். இதனால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று திமிராக இருக்கிறார் . இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
