மாவட்ட செய்திகள்
இருளில் மூழ்கிய மதுரை : அவதியில் மக்கள்.
மதுரையில் காளவாசல், அரசரடி, ஆரப்பாளையம், கண்மாய்கரை என பல பகுதிகளில் நேற்று 20.4.22 அன்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு விடை பெற மின்சாரம் இரவு 9.20 மணிக்கு தான் வந்தது. மீண்டும் 9.30 மணிக்கு மின்தடை ஏற்பட்டு மீண்டும் 11 மணிக்கு தான் வந்தது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த மின்வெட்டால் வயதானோர், குழந்தைகள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இது கோடைகாலம் மக்களை நாள்தோறும் வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையில் 3 மணி நேர மின்வெட்டு மதுரை மக்களை கடும் அவதிக்குள்ளாகியது.
இது பற்றி தமிழக மின்பகிர்மான கழக புகார் எண் 9498794987 என்ற எண்ணிற்கு அழைத்தால் காத்திருப்பு நேரம் (ஆங்கிலத்தில் உச்சரிப்பு) 71 நொடி எனக் கூறி கடைசியில் 3 நொடி என புகார்மைய அதிகாரியிடம் பேசத்தான் நமக்கு வாய்ப்பு கிடைத்தது என்றால் தொடர்பு துண்டிக்க படுகிறது. விடுவோமா. … நாங்க தொடர்ந்து முயற்ச்சி செய்த பின் புகார்மைய அதிகாரியை தொடர்பை பெற்றோம். அவர் விபரங்கள் கேட்டார் நாங்களும் அரசரடி மின்நிலையத்திற்கு உட்பட்டது என கூறினோம் . மின்தடை பற்றி மதுரையிலிருந்து எந்த தகவலும் அதிகாரிகள் தரவில்லை என்றார். புகாரை பதிவு செய்கிறேன் என்றார். இணைப்பு துணடிக்கப்பட்டது. அரசு மக்களுக்காக பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தினாலும் சில அதிகாரிகளின் கவனக்குறைவால் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக
இது அரசரடி மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் அதிக அளவில் தினம் தினம் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே அரசு மதுரை மின்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்தடையில்லா மதுரையை உருவாக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் கோரிக்கையாகும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.