மாவட்ட செய்திகள்
சித்தையன்கோட்டை – பேருந்து நிலைய நுழைவு வாயிலில் மீன் கடைகள் அமைத்து சுகாதார சீர்கேடை விளைவிக்கும் வியாபாரிகள்.
சித்தையன்கோட்டை – பேருந்து நிலைய நுழைவு வாயிலில் மீன் கடைகள் அமைத்து சுகாதார சீர்கேடை விளைவிக்கும் வியாபாரிகள்-தங்களுக்குமாற்று இடம் அமைத்து தர பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் உள்ள பழைய பேருந்து நிலைய நுழைவுவாயிலில் போக்குவரத்திற்கு இடையூறாக பேருந்து நிலைய நுழைவாயில் வியாபாரிகள் மீன் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வியாபாரம் செய்வது மட்டுமின்றி அதன் கழிவுகளை சாலை ஓரங்களிலும் பேருந்து நிலையத்திற் குள்ளேயே கொட்டுவதால் அதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. அதனைத் தொடர்ந்து மீன் கழிவுகளை உண்ணுவதற்கு பசியுடன் காத்திருக்கும் அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் வெறிநாய்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கடித்து குதறும் அபாயம் உள்ளது. எனினும் இதனை பேரூராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் கண்டுகொள்ளாத நிலை தொடர்கிறது.ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலைய நுழைவாயில் மீன் கடை அமைக்கும் வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கித் தந்து உதவிட வேண்டும் என்றும் நோய் தொற்று பரவும் அபாயத்தில் இருந்தும் தெரு நாய்களிடம் இருந்தும் பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட காலம் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.