மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மற்றும் மாமனார் மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி தப்பியோட முயன்ற கணவன்.
வாணியம்பாடி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மற்றும் மாமனார் மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி தப்பியோட முயன்ற கணவனை கிராம மக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்த ராஜகோபால்(45) என்பவருக்கும் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டை, முனியன் கொல்லை பகுதியை சேர்ந்த அலமேலு என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரு ஆண்டுகளிலேயே கணவன்-மனைவிக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் , மனைவி அலமேலுவிடம் ராஜகோபால் சொத்து பிரித்து வாங்கி வருமாறு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அலமேலு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவனைப் பிரிந்து வாணியம்பாடி அருகே உள்ள ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதிக்கு வந்த ராஜகோபால் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை மீண்டும் சேர்ந்து வாழ அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு வர மறுத்த மனைவி அலமேலுவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு கால் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார் .
மேலும் அதனைத் தடுக்க வந்த மாமனார் சந்தானம் மற்றும் மாமியார் சின்னதாய் உள்ளிட்ட 3 பேரையும் கால்களில் வெட்டி விட்டு தப்பியோடிய ராஜகோபால் அங்குள்ள ஒரு மலைப்பகுதியில் பதுங்கியிருந்தவரை கிராம மக்கள் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆபத்தான நிலையில் இருந்த மூன்றுபேரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே குடும்பத்தகராறு காரணமாக 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி.மற்றும் மாமனார் மாமியார் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய கணவனை கிராம மக்கள் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.