BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் வகையில் பூமி தினமான இன்று நாகர்கோவில் மண் காப்போம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு உறுதிமொழி ஏற்று மண்காப்போம் என்ற பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் வகையில் பூமி தினமான இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்கள், பெரியவர்கள்,பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலியாக நின்று பூமி தினத்தை காக்கும் வகையில் மண் காப்போம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு உறுதிமொழி ஏற்று மண்காப்போம் என்ற பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

உலக உயிர்கள் வாழத் தகுதியான இடமாக இந்த பூமி மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் பதிவு செய்கின்றன. அத்தகைய அற்புதம் நிறைந்த இந்த பூமி, மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, காற்று மாசடைந்து, தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இருந்து பூமியை மீட்டு எடுக்கும் பொருட்டு பல்வேறு தன்னார்வ அமைப்புகள், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன,அதேபோன்று ஈஷா பவுண்டேஷன் நிறுவனர்.சத்குரு வாசுதேவ் இதற்காக முயற்சியை முன்னெடுத்துள்ளார், அவரது முன்னெடுப்பின் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவகம் முன்பு ஈஷா அமைப்பை சேர்ந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மண்காப்போம் என்ற பிரச்சாரம் நடைபெற்றது, பூமி தினமான இன்று மண்ணை காப்போம் என்ற உறுதிமொழியுடன் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள், பெண்கள் ஈடுபட்டனர், இதில் மனித சங்கிலியாக கைகோர்த்து நின்று மண் காப்போம் என கோஷமிட்டு உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )