மாவட்ட செய்திகள்
உலக பூமி தினம்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ஆம் தேதி உலக பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக பூமி தினத்தையொட்டி உடுமலை ஒன்றியம்,இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கதை சொல்லி பூங்கொடி அவர்கள், இணையவழியில் கலந்து கொண்டு பூமியைப் பாதுகாப்பது, பற்றியும் ,மரங்கள் வளர்ப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது பற்றியும் பல்வேறு வேடங்கள் அணிந்து கதைகள் வழியாக எடுத்துக் கூறினார்.


பள்ளித் தலைமையாசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்.பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் பூமி தினம் அனுசரிக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். பூமியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் குறும்படங்களும் திரையிட்டு காட்டப்பட்டது. நிகழ்வில் உடுமலை பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கொடைக்கானல் கே.சி.பட்டி தொடக்கப்பள்ளி, திருச்சி இடைமலைப்பட்டி புதூர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் என 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைய வழியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
