BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கண்டெண்ட்மெண்ட் மண்டல தலைவர் பரமசிவம் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கண்டெண்ட்மெண்ட் மண்டல தலைவர் பரமசிவம் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
அவரை மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து மத்திய அரசுடன்
திமுக கட்சி மட்டுமல்ல திமுக அரசும் மோதல் போக்கை செய்து வருகின்றனர்.

ஸ்டாலின் தொடர்பான சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட பிஜேபி கட்சியினர்
60 மேற்பட்டவர் மீது வழக்கு புதிய செய்யபட்டுள்ளது.

தொடர்ந்து அண்ணாமலை மீது மிரட்டல் விடுத்து வருகிறது.
4 நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் தர்மபுரம் ஆதீனம் சென்றபோது கருப்புக்கொடி ஏந்தி கலவரம் செய்தனர். தமிழக அரசு ஆளுநர் மீது வன்மத்தை தமிழகத்தில் கிளப்பி விடுகின்றனர்.

25 பேர்மீது எப்ஐஆர் போட்டிருந்தாலும் கூட முதலமைச்சர் கடுமையாக பேசி இருக்க வேண்டும்.

தொடர்ந்து பிஜேபி தொண்டர்கள் மீது அச்சுறுத்தல் செய்தால் திமுக தோற்று போகும்.

ஆளும் கட்சி அராஜகம் தொடர தொடர பிஜேபி வளர்ந்துகொண்டே இருக்கிறது.

குரோனோ காலகட்டத்தில் 140 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் ஒரு பட்டினி சாவு கூட இல்லை. கரீப்
அன்னயோஜனா மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி ரேஷன் கடைகளில் பாரதப் பிரதமர் பதவி மாட்ட வேண்டுமென முடிவு செய்து காவல்துறை துணையுடன் சென்று பல இடங்களில் போட்டோக்கள் மாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால்தான் மாட்டப்படுகிறது.

திருச்சியில் மட்டும் ராமதாஸ் என்ற ஒரு கவுன்சிலர் மண்டல தலைவர் பரமசிவம் ரேஷன் கடையில் மோடி படத்தை மாட்ட சென்றபோது ராமதாஸ் அங்கு வந்து படத்தை சாக்கடை வீசியுள்ளார். அவரைத் தாக்கியுள்ளனர்.

இந்த இப்பிரச்சினை தொடர்பாக கவுன்சிலர் ராமதாசை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அனுமதி இல்லை என்று கூறி அனைவரையும் கைது செய்துள்ளனர்.

ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட துணைபோகும் அரசாங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிஜேபி ஆர்ப்பாட்டம் நடத்த ஏன் தடுக்கிறது. இது ஜனநாயகத்தினை நசுக்கிற வேலை கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 5ரேஷன் கடைகளில் மீண்டும் போய் மோடி படத்தை வைப்பார்கள். அரசாங்கமும், காவல் துறையும் தடுக்கக் கூடாது. தடுத்தால் நானும் வருவேன் மாநில அண்ணாமலையும் வருவார்.

திருச்சியில் கவுன்சிலர் ராமதாசின் வன்முறைக்கும், அராஜகத்திற்கு பிஜேபி வழிவிடாது.
இதனை சட்டரீதியாகவும் ஜனநாயகம் முறையிலும் எதிர்கொள்வோம்.

திமுகவின் அடக்குமுறைக்கு பாஜக அஞ்சாது.
திமுக தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். திமுக என்றாலே வன்முறை ஆட்சி என்று இமேஜ் மக்களிடம் உள்ளது.

அதிமுகவிடம் சகித்துக் கொள்ளும் போக்கு உள்ளது. திமுகவுக்கு சகித்துக் கொள்ளும் போக்கு இல்லை.

கரீப் அன்ன யோஜனா திட்டம் தற்போது ஒதுக்கீடு வந்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் மோடி புகைப்படம் வைக்கும் செயலை செய்து வருகிறோம்.

தடுப்பூசியை மத்திய அரசு கொடுத்தது. அதுமேல ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தான் தமிழக அரசு செய்கிறது,

திருச்சியில் மட்டும் பாரதிய ஜனதா கொடிக்கம்பம் அமைப்பதற்கு தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )