BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு குட்பை, மாநகராட்சி நடவடிக்கை.

தஞ்சாவூர் மாநகராட்சி 19வது வார்டில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மாநகராட்சி உரக்கிடங்கு அமைந்துள்ளது, நாளடைவில் இந்த உரக்கிடங்கு பராமரிப்பு இன்றி குப்பை கிடங்காக மாறியது,51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு மலைபோல் உள்ளது, சுமார் 150 மெட்ரிக் டன் அளவுடைய குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் கன மீட்டர் அளவுடைய குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் அந்த குப்பைகள் கோடை காலத்தில் தீயில் எரிந்து அதன் புகை பல கி.மீட்டர் தூரம் வரை பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பயோமைனிங் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு 4 தனித்தனி நவீன இயந்திரங்கள் மூலம் தினசரி 1200 முதல் 1500 கன மீட்டர் அளவிலான குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட சில கழிவுகள் சிமெண்ட் நிறுவனத்திற்கு பயன்பாட்டிற்காக தினசரி அனுப்பி வைக்கப்படுகிறது, மேலும் பிற கழிவுகள் உரமாகவும் விவசாய பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது வரை சுமார் 60 ஆயிரம் கன மீட்டர் அளவுடைய குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது,

இந்த பணி வரும் ஜூன் மாதத்திற்குள் முடிவடைய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது, மேலும் வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இந்த குப்பை கிடங்கில் உயிரி எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது,

ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் குப்பை கிடங்கு அகற்றப்பட்ட பின் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சுமார் 190 கோடி மதிப்பீட்டில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது,

இந்த குப்பை கிடங்கு அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் ராமநாதன் நகர்நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்,இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது இந்த குப்பைகள் தரம் பிரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )