BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை அடுத்து மங்கைநல்லூரில் புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்:-

குத்தாலம், பிப்ரவரி- 27;
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அவசரகால சிகிச்சை பெறுவதற்காக 12 அவசரகால உறுதியான 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனையில் கொண்டு செல்வது, வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வாகன வசதி இன்றி தவிப்பவர்களுக்கு உதவுவது போன்ற சேவை பணிகளை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை மங்கைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கோபி, முன்னிலையில் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமுர்தகுமார் வரவேற்புரையாற்றினார்.

இதில், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, செம்பை பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், மருத்துவர்கள் கார்வண்ணன், அப்துல் ரவூப், ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் ராக்கெட், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், அன்பரசன், மோகன், ராஜேஷ் கண்ணன் மற்றும் மருத்துவ செவிலியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )