BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செம்பனார்கவிலில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் வரவேற்று பேசினார்.

இதில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு 2020-2021 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் கட்டடத்தைத் திறந்து வைத்து பேசினார்.

விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, உதவி பொறியாளர் ஜே.கீதா, திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா நன்றி கூறினார்.

படவிளக்கம்: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழாவில் எம்.எல்.ஏ நிவேதா எம். முருகன் கல்வெட்டை திறந்து வைத்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )