BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம்.

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் கரையடி மாடசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் மாபெரும் மாட்டுவண்டிகள் பந்தயம் நடந்தது. இரண்டு பிரிவாக நடந்த இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் 9 பெரிய மாட்டு வண்டிகளும், 22 சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டது. ஆதாளிகுளம் முதல் பழனியப்பபுரம் வரை மாட்டுவண்டிகளுக்கு பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


இந்த போட்டியை மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மாட்டுவண்டி பந்தையத்தை பார்த்துச் சென்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )