மாவட்ட செய்திகள்
சாலையில் திடீரென்று தீப்பற்றி எறிந்த ஆம்னி வேன் – 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கிராமத்தில் இருந்து மூன்று பெண்கள் உள்ளிட்ட 9 பேர் ஆம்னி வேனில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.

ஆம்னி வேன் திருச்சி – தஞ்சை சாலையில் தேவராயநேரி அடுத்த புதுக்குடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது ஆம்னி வேனில் இருந்து புகை வந்ததால் நான் டிரைவர் சக்திவேல் வேனை சாலையோரம் நிறுத்தினார். வேனில் இருந்தவர்களும் வேகமாக கீழே இறங்கியதுடன், புகை வருவதற்கான காரணம் குறித்து பார்ப்பதற்குள் மளமளவென தீ பற்றி எரிந்தது. மேலும் ஆம்னி வேன் பொருட்கள் வெடிக்க தொடங்கியதால் அங்கிருந்து அனைவரும் தப்பியோடினர்.


ஆம்னி வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தாலும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. தக்க சமயத்தில் ஆம்னி வேன் டிரைவர் வேனை நிறுத்தாவிட்டால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்க நேரிடும். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
