BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கான முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் மருத்துவர் பணி நியமன ஆணை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கான முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் மருத்துவர் பணி நியமன ஆணை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்காக 7லட்சம் மதிப்பிலான முதலுதவி மருத்துவ சேவை மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் .

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றுப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோரும் திருச்சி மற்றும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் .

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காகவும் அவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்க்காக கோவிலில் உள்ள சந்திர புஷ்கரணி குளத்தின் அருகில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் முதலுதவி மருத்துவ சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்முதலுதவி மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தொடர்ந்து அங்கு பணியாற்ற உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், இந்து சமய அறநிலை துறை இணை இயக்குனர் செல்வராஜ், மேயர் அன்பழகன் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியண்டி , மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உடனிருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )