மாவட்ட செய்திகள்
மானுப் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்.

மானுபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடை பெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் கலைமணி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில்.ஆசிரியைகள் மற்றும் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைவர் பதவிக்கு பலத்த போட்டி நிலவியதால் தேர்தல் நடைபெற்றது..அதில் தலைவராக. சி..புவனேஸ்வரியும் , துணைத்தலைவராக லாவண்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் இரண்டு பஞ்சாயத்து உறுப்பினர்கள் . தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்களின் பெற்றோர் என 15 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக தேர்வு செய்யப்பட்ட புவனேஸ்வரி பேசுகையில் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சிறந்த முறையில் பாடுபடுவேன் என உறுதியளித்தார். இறுதியாக ..உதவி தலைமை ஆசிரியை காளீஸ்வரி நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
