மாவட்ட செய்திகள்
தூர்வாரும் பணிகள் மே 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என தஞ்சையில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

தூர்வாரும் பணிகள் மே 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என தஞ்சையில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே குழி மாத்தூர் கிராமத்தில் கோணக்கடுங்கலாறில் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில்மகேஷ் அளித்த பேட்டியில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 21.03 கோடி மதிப்பில் 1,356.44 கி.மீ. தொலைவுக்கு 170 இடங்களில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படும்.

இப்பணிகள் அனைத்தும் மே 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றார் கடந்த ஆண்டு தூர்வாரும் பணியை பார்வையிட்டு முதல்வர் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்ததோடு கடைமடைக்கு தண்ணீர் சென்று அடைந்ததை இருபது நாட்களில் உறுதி செய்தார் இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கோரணா ஊரடங்கு பள்ளி திறப்பு பள்ளி மூடுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
