மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் ஏற்கனவே இயங்கிவரும் மழலையர் பள்ளிகளை வாய்மொழி உத்தரவு என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மூடக் கூறி கட்டாயப் படுத்துகின்றனர். இதனால் தென்னமநாடு, சேதுராயன்குடிகாடு, தலையாமங்கலம், ஆழிவாய்க்கால், பஞ்சநதிகோட்டை உள்ளிட்ட அரசு அங்கீராத்துடன் செயல்பட்டு வந்த பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து மூடப்படும் அபாயத்தை நோக்கி தள்ளப்படும். எனவே அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் துவங்கி செயல்படுத்த வேண்டும், பள்ளி கல்வித்துறை வாய்மொழி உத்தரவை திரும்பப் பெற வேண்டும் , தமிழ்நாடு முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், தஞ்சை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரைக்க மனு அளிக்கப்பட்டது. ஒரத்தநாடு ஒன்றிய அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அ.வெங்கடேசன், நிர்வாகிகள் இரா.பிரசன்னா, இரா.அருணாச்சலம், த.கிருஷ்ணன், வழக்கறிஞர் அருணாதேவி, அ.ஏகலைவன் சமூக ஆர்வலர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
