BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை.

பூனேவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 16381 என்ற எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திருப்பூர் ரயில்நிலையம் வந்தபோது ரயில்வே போலீசாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது . அப்போது ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு 8 கிலோ இருப்பதாகவும் , கஞ்சா இருந்த பையை கொண்டு வந்தவர்கள் யார் , ஏன் விட்டுச் சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )