மாவட்ட செய்திகள்
தேனி மாவட்ட கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்பாகவும் கட்டுமானப் பொருட்களான கிராவல் மண் காளவாசல் மண் எம் சாண்ட் கூடுதல் விலைக்கு விற்பதும்தொடர்பாக அலுவலகம் முன்பு தொடர் போராட்டம்.
தேனி மாவட்ட கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்பாகவும் கட்டுமானப் பொருட்களான கிராவல் மண் காளவாசல் மண் எம் சாண்ட் கூடுதல் விலைக்கு விற்பதும்தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட வைகை டிராக்டர் டிப்பர் ஜேசிபி உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பாக தொடர் போராட்டம்.


தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கிராவல் குவாரிகள் காளவாசல் மணல் குவாரிகள் மற்றும் எம்சாண்ட் ,ஜல்லி கல் குவாரிகள் அதிகமான விலைக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு விற்கப்படுகிறது கிராவல் குவாரிகள் குறைவாக அனுமதி சீட்டுகளை பெற்று செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர் . கேரளாவில் இருந்து வரும் சுமார் 10 யூனிட் அளவு கொண்ட கனரக அவர்களில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட கேரள பதிவெண் கொண்ட வண்டிகளுக்கு திருட்டுத்தனமாக எம்சாண்ட் ஜல்லி கற்கள் போன்ற கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்ல உடந்தையாக உள்ளது அதிக விலை கொடுத்து கேரளா அடிப்பார்கள் எடுத்துச் செல்வதால் தேனி மாவட்டத்தில் கட்டுமானத்திற்கு தேவையான எண்சாண் ஜல்லி விலை அதிகரித்து கொண்டே செல்கிறதுஇதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு கேரளாவிற்கு விற்கப்படும் எம்சாண்ட் ஜல்லி போன்றவைகளை தடுத்து நிறுத்த வேண்டும் கிராவல் குவாரிகள் அரசு கொடுக்கும் ஒரு அனுப்புகை சீட்டு மட்டுமே கொடுக்கும் ஆவணத்தை அரசு அனுமதி இல்லாமல் திருப்பி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துகின்றனர் .


இதனால் அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது மேலும் 3 – யூனிட் கிராவல் குவாரியில் 3500 வரை விலை வைத்து விற்கப்படுகிறது இதனால் பொதுமக்கள் மீது அதிக விலை ஏற்றம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது செங்கல் சூளைக்கு தேவையான கரம்பை செம்மண் தவுட்டு மண் போன்றவைகள் கொள்ளை லாபத்தில் விற்கப்படுகிறது குவாரிகளில் சுமார் 3-யூனிட் மண்விலை 5500 என்று அதிக விலைக்கு விற்கப்படுகிறது விலையேற்றத்தால் சுமார் 200க்கும் மேற்பட்ட காளவாசல் உரிமையாளர்கள் மற்றும் காளவாசலில் வேலை செய்யும் தொழிலிகள் பாதிக்கப்பட்டு வேலை இழந்தும் உள்ளனர் மேலும் தற்போது தேனி மாவட்டத்தில் இயங்கி வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கல் மற்றும் மண் குவாரிகள் இயங்கவில்லை .

அரசு அந்த குவாரிகளை இயங்க அனுமதி கொடுப்பதன் மூலம் விலை ஏற்றம் குறையும் மேலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த வீடு கட்டுவது கனவாகவே போய்விடுகிறது மக்கள் மீது விலை ஏற்றம் திணிக்கப்படுகிறது மேலும் அரசு ஆவணத்தை திருத்தம் குவாரி உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் கொள்ளை இலாபம் ஈட்டும் எம்சாண்ட் மற்றும் கிராவல் குவாரி களையும் கேரளாவிற்கு கடத்தப்படும் கடமைகளையும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அவர்களிடம் மனுவை கொடுத்தானர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
