BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தனியார் மஹாலில் (அன்பால் இணைவோம்) இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் (அன்பால் இணைவோம்) இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நிகழ்வு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில துணைச் செயலாளர்கள் துரைமுகம்மது, பேராவூரணி அப்துல் சலாம், ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.

நிகழ்வில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னத்துரை, முன்னாள் கல்வியாளர்கள் சம்பத், மாரிக்கண்னு , முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமேணிநாதன், ரோட்டரி சங்கம் ஜேம்ஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிலாவிடுதி மோகன், ஜமாஅத் கமிட்டி தலைவர் கலிபுல்லா, GDM . வாண்டையார் தமிழரசன், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக கலீல் ரஹ்மான் உலவி ஹஜ்ரத் அவர்கள் நீதிபோதனை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வு ஒரு சமூக நல்லிணக்க திருவிழாவாக நடைபெற்றது என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மஜக வினரை பாராட்டினர்.


நிகழ்வில் வர்த்தக சங்க வியாபாரிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் , மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் , சமூக நல ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், மஜக மாவட்ட , ஒன்றிய, நகர, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்..
நிகழ்வின் இறுதியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )