மாவட்ட செய்திகள்
தஞ்சை ராஜப்பா நகர்வாசிகளால் ஸ்ரீ செங்கமல நாச்சியம்மன் 57-வது ஆண்டு பால்குட அபிஷேகம் விழா.
கேரளா செண்டை மேளம் தென்னக பண்பாட்டு மையம் ஏற்பாடு.
தஞ்சை மாநகராட்சி ராஜப்பா நகர்வாசிகளால் அப்பகுதியில் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ செங்கமல நாச்சியம்மன் கோவிலின் 57-வது ஆண்டு பால்குட அபிஷேகம் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 24- நம் தேதி முதல் தொடங்கியது.
அன்று காலை 7 மணிக்கு சிவகங்கை பூங்கா குளத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். மாலை 7 மணிக்கு சுவாமி புறப்பாடும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றன. நேற்று திங்கட்கிழமை 25- ந்தேதி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றன. அப்போது தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கேரளா செண்டை மேளம் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் சீனிவாசன் தலைமை வகித்தார். தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மாநகரப் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னக பண்பாட்டு மைய அலுவலர் ரெங்கபாஷ்யம், ஆடிட்டர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்றிரவு இளைஞர்கள் சார்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும், கேரளா செண்டை மேளம் நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையில் இருந்தன. நாளை புதன்கிழமை 27- ந் தேதி இரவு விடையாற்றி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் செங்கமல நாச்சியம்மன் கோவில் தெரு, அய்யனார் கோவில் தெரு, ராஜப்பா நகர், டி.பி.எஸ். நகர், பாரதி நகர்வாசிகள், கண்ணன் நகர் மற்றும் கோயில் தெரு, கோவில் விழா நிர்வாக குழுவினர்கள், தெருவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள் இணைந்து சிறப்பாக செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.