BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் தேங்காய்ப்பூ வியாபாரம் அமோகம்.

நாகர்கோவிலில் தேங்காய்ப்பூ வியாபாரம் அமோகம்-சாலை வீதியில் தள்ளுவண்டிகளில் தேங்காய் பூ விற்பனை அதிகரித்துள்ளது,ஊட்டச்சத்து நிறைந்த தேங்காய் பூ வுக்கு மவுசு ஏறியுள்ளதால் விலையும் ஏறியுள்ளது..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சாலை விதிகளில் தற்போது முளைத்தள்ளிய தேங்காய்களின் விற்பனை காண முடிகிறது, தேங்காய் மூலம் மண்ணுக்குள் 4 அல்லது 5 மாதங்கள் பயிர் செய்து விற்பனைக்கு வரும் தேங்காவின் பூ வில் இருக்கும் பயன்கள் அதிகம், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் உள்ளது,இதில் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்,பருவகால தொற்று நோயிலிருந்து முழுமையாக பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.

ஜீரணசக்திக்கு உதவுகிறது,புற்றுநோய் உண்டாகும் செல்களை அழிக்கிறது,முக்கியமாக இந்த தேங்காய் பூவில் முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைய உள்ளது சுருக்கங்கள்,வயதான தோற்றம் சருமத் தொய்வு போன்றவை இது சாப்பிட்டு வந்தால் குறைகிறது என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர், மேலும் கொடைக்கானல்,குன்னூர் போன்ற பகுதியில் இருந்து மகசூல் செய்து நாகர்கோவிலுக்கு தேங்காய்ப்பூ விற்பனைக்கு கொண்டு வருகின்றனர், ஒரு தேங்காய் பூவின் விலை ரூ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது, இதை வாங்குவதற்காக பல்வேறு தரப்பினர் கார்களிலும்,இரு சக்கர வாகனங்களிலும் வந்து வாங்கி செல்கின்றனர் தற்போது தேங்காய் பூ விற்பனை நாகர்கோவில் சாலை பகுதிகளில் அதிகரித்துள்ளது,இதனால் தேங்காய் பூ விலையும் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )