மாவட்ட செய்திகள்
அடிக்கடி பழுதாகி வரக்கூடிய நிலையில் ஆத்திரத்தில் ஓலா பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிசியோதெரபி மருத்துவர் பிரித்திவிராஜ் ஓலா பைக் ஒன்றை வாங்கியுள்ளார்
இந்த ஓலா பைக்கை குடியாத்தம் ஆர்டிஓ ஆபீஸ்க்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வந்த பொழுது பழுதாகி நின்று உள்ளது.
இதுகுறித்து சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து சொல்லி இருக்கின்றார்.
2 மணி நேரமாகியும் அவர்கள் வராததால் ஆத்திரத்தில் அடிக்கடி பழுதாகி வரக்கூடிய நிலையில் அதனை சரிசெய்ய முடியாமல் ஆத்திரத்தில் ஓலா பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
அதனுடைய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஏற்கனவே ஓலா பைக் பல்வேறு பகுதிகளில் தீப்பிடித்து எரிவதாக குற்றச்சாட்டு எழுந்தது அதனைத் தொடர்ந்து ஓலா நிறுவனமானது அந்த பைக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருந்தது இந்த நிலையில் ஆம்பூர் அருகே பைக்கு அடிக்கடி பழுதாகும் அதனை ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்க கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.