மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்க வலியுறுத்தி மதிமுக நகரம் சார்பில் மனு.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அல்லது தூக்கி (லிப்ட்) அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக நகரச் செயலாளர் எஸ்.பால்ராஜ், தென்னக ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு தினமும் சுமார் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கோவில்பட்டி ரயில் நிலையத்தை கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள், முதியோர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 2ஆவது நடைமேடைக்குச் செல்ல படிக்கட்டுகள் ஏறுவதற்கு மாற்றுத்திறனாளிகள், முதியோர், மூதாட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடைகளுக்குச் சென்று வர நகரும் படிக்கட்டு அல்லது தூக்கி அமைக்க வேண்டும், ரயில் நிலையத்தில் பார்சல் சேவை வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.