BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருமலைராயன்பட்டினம் பெண்கள் தொழிற் பயிற்சி மையத்தை அமைச்சர் ஆய்வு.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினத்தில் அமைந்துள்ள பெண்கள் தொழிற்பயிற்சி மையம் மற்றும் ஆண்கள் தொழிற்பயிற்ச்சி மையத்தை பாண்டிச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் உடன் இருந்தார்.

பெண்கள் தொழிற்பயிற்சி மையத்தில் 660 மாணவிகள், 388 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கொரானா தொற்று காரணத்தால் வருகை குறைந்துள்ளது. கட்டிடங்கள் பழுதாகி உள்ளது, இயந்திரங்கள் வெகு நாட்களாக மாற்றாமல் பழுதாகி உள்ளது. மேலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் பல்வேறு கட்டங்களில் இந்திய அளவில் முதலிடத்தில் வந்துள்ளது. என்று சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த வாரம் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாக என்னிடம் சமர்ப்பியுங்கள் என்றும் அதற்குண்டான பணிகளை விரைவில் முடிக்க முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரப் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் தொழிற் பயிற்சி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை எனவும் சம்பந்தப்பட்ட ஊழியர்களை கொண்டு சரி செய்யும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )