மாவட்ட செய்திகள்
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 4649 கிலோமீட்டர் தூரத்திற்கு 80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணி.
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 4649 கிலோமீட்டர் தூரத்திற்கு 80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் மே 31 ம்தேதிக்குள் முடிக்கப்படும், தூர் வாரும் பணிகளில் குறைகள் இருந்தால் “உழவன் செயலி” மூலம் விவசாயிகள் அளிக்கும் புகார்களுக்கு 48 மணி நேரத்தில் உரிய பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சையில் இப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.சந்தீப் சக்சேனா பேட்டி.
தஞ்சை மாவட்டம் ஆச்சாம்பட்டியில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் IAS, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 மாவட்டங்களில், 4649 கி.மீ.,துாரத்திற்கு துார்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. வெளிப்படை தன்மையாக விவசாயிகளை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுவரும் மே மாதம் 31ம் தேதிக்குள்ளாக அனைத்து பணிகளும் முடிந்து விடும். எந்தந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது என்பதை கண்டறிந்து, அப்பகுதியும் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை அடிப்படையில் தான் திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும்… . 29 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு வாய்க்கால்கள் உள்ள நிலையில் தற்போது பகுதி பகுதியாக துார்வாரும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு இந்தாண்டு துார்வாரப்படுகிறது. படிபடியாக பணிகள் முடிக்க முடியும்.
தண்ணீர் பாசனத்திற்கு முறையாக செல்லாத இடங்களிலும், தண்ணீர் தேங்கும் இடங்களிலும் முக்கியத்துவம் அளித்து துார்வாரும் பணிகள் செய்யப்படுகிறது. மேலும், துார்வாரும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துார்வாரும் பணிகளை விவசாயிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உழவன் செயலி மூலம், துார்வாரும் பணிகளில் குறைப்பாடுகள் இருந்தால் விவசாயிகள் புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் உரிய பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.