மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2பேர் கைது.
கோவில்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2பேர் கைது -1,50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஹரிபாலகிருஷ்ணன் மகன் யூவசித்தன் (21) என்பவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு இன்று காலை பார்க்கும்போது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து யூவசித்தன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கூடன்குளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் மகராஜன் (28) மற்றும் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் நவீன் (22) ஆகிய இருவரும் யூவசித்தனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் மகராஜன் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 1,50,000 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.