BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே 2.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் மூவர் கைது கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பெரியசாமிபுரம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி பொருட்களை கடத்தி வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதாக சூரங்குடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விளாத்திகுளம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வேம்பார் பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து ராமநாதபுரம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் வேல்பாண்டி , பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் அழகுமலை உள்ளிட்ட மூவரையும் கைது கைது செய்த காவல்துறையினர் இரண்டரை டன் மதிப்பிலான ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை சூரங்குடி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )