BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் தனியார் மதுபான விடுதியினை அகற்ற வலியுறுத்தி பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் குடியிருப்பு நிறைந்த இடத்தில் தனியார் மதுபான விடுதி அமைந்துள்ளது. இந்த மதுபான விடுதியால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் அதிகளவு குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் விடுதியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஓடக்காடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

அவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் உடனடியாக மதுபான விடுதியை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இல்லை என்றால் மதுபானவிடுதியை அப்புறப்படுத்தும் வரை இதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி விடுதி முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )