மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் கூரை வீட்டில் தீ விபத்து.

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையை சேர்ந்த வேல்சாமி அவரது மனைவி ஈஸ்வரி இவர்கள் கூலி தொழிலாளி ஈஸ்வரியின் தந்தை மருதப்பன் (வயது 70). இவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மருதப்பனை பார்ப்பதற்காக வேலுச்சாமி அவரது குடும்பத்தினர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் மின்கசிவு ஏற்பட்டு கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டிலுள்ள டிவி, மிக்ஸி, கிரைண்டர், கட்டில் வீட்டுப் பத்திரம், ரேஷன் கார்டு, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து கருகியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு குடங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர்.
CATEGORIES திண்டுக்கல்
