மாவட்ட செய்திகள்
களிமேடு தேர்வு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநகராட்சியில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாமன்ற கூட்டத்தில் மேயர் இராமநாதன் உறுதி.



தஞ்சை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை துவங்கியது. கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் பேசுகையில் தஞ்சை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தியபோது களிமேடு கிராமமும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. எனவே தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் மாநகராட்சியில் உடனடியாக தற்காலிக பணியும் பின்னர் அவர்களுக்கு நிரந்தர பணியும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய மேயர் சண்.இராமநாதன் தேர்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சியில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
