மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து முழுமையான ஆய்வு.
திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு பின்பு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பேட்டி
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 51வது வார்டு தென்னம்பாளையம் டி எம் சி காலனி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மண்டலம் முழுவதும் பசுமையாகவும் தூய்மையாகவும் வைப்பதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் பணி இன்று தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வுக்குப் பின் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தார்சாலை வசதி மற்றும் குடிநீர் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.