BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டீசல் மற்றும் உரம் விலையை உயர்த்தி விட்டு நெல்லுக்கான விலையை உயர்த்தாமல் இருந்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி தஞ்சையில் விவசாயிகள் கைகளையும் கண்களையும் கட்டி கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று நடைபெற்றது இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கைகளையும் கண்களையும் கட்டி கொண்டு கயிற்றில் தொங்கிய பண்ணை கடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் மற்றும் உர விலையை உயர்த்தி விட்டு நெல்லுக்கு விலை உயர்த்தாமல் இருந்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்ற கேள்வியோடு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டாலுக்கு 2500 வழங்குவதாக கூறி அதை உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் மத்திய மோடி அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )