BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர். மே-5ல்நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த அறிவிக்கவேண்டும்! ஏஐடியூசி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர். மே-5ல்நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த அறிவிக்கவேண்டும்! ஏஐடியூசி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது!!தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளில் மே 5ல் நடைபெறும் சட்டமன்ற போக்குவரத்து மானியக் கோரிக்கையில் தீர்வு காண வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழகத்தில் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணியாளர்கள், தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் பேசுவது நடைமுறையில் உள்ளது. இவர்களுக்கு கடந்த 2019 செப்டம்பர் மாதம் 14 வது ஊதிய ஒப்பந்தம் பேசி அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அடுத்த ஒப்பந்தம் நெருங்கிவிட்ட நிலையில் நிலுவையிலுள்ள ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடித்து சம்பள உயர்வு ஏற்படுத்தவேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அன்றாடம் வருவாய்க்கும் செலவினத்திற்குமான வித்தியாசத் தொகையை அரசு பொறுப்பேற்று அவ்வப்போதே வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கும், சேவைக்கும் முக்கிய பங்காற்றிய சுமார் 85 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2016 முதல் ஆறாண்டு காலமாக உயர்ந்துவிட்ட பழைய புதிய அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அகவிலைப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்துஉயர்த்தி வழங்க வேண்டும்,

திமுக தேர்தல் கால வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , ஓய்வு பெற்ற போக்குவரத்து அலுவலர்களுக்கு நிலுவையிலுள்ள ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை தாமதப்படுத்தாமல் அமுல்படுத்த வேண்டும், விருப்ப ஓய்வு, மருத்துவ ஓய்வு, பணியின்போது இறந்த தொழிலாளர்களுக்கு இரண்டு வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள பணிக்கொடைதொகை, பிஎஃப் தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவிக்க வேண்டும் ,கடந்த ஆட்சியில் தனியாருக்கு சாதகமாக திருத்தப்பட்ட வழித்தடங்களை திரும்பப் பெற்று கழகங்களே இயக்கவேண்டும், கடந்தகால போராட்டங்களில் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும், தண்டணைகளை ரத்து செய்யவேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் தற்போது அதிகமாக உள்ள வேலைப்பளுவை குறைக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களை முழுமையாக இயக்க வேண்டும்,கடந்த 2016 செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும், ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு இன்று காலை10 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி,ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாத்துரை ஆகியோர் தலைமை வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தினை வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன் துவக்கி வைத்துப் பேசினார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன், மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல், திட்ட தலைவர் முபாரக் பாட்சா, புதுக்கோட்டை மண்டல கௌரவ தலைவர் பி.சக்திவேல், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். பி.முத்துக்குமரன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, நுகர்பொருள் வாணிப கழக சங்க மாநிலப் பொருளாளர் தி.கோவிந்தராஜன், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் டி.தங்கராசு, ஜி.சண்முகம், என்.சேகர், கே.சுந்தரபாண்டியன், எம்.மாணிக்கம், ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் மல்லி.தியாகராஜன், ஆகியோர் பேசினார்கள்.முடிவில் சங்க பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் நன்றிகூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )