மாவட்ட செய்திகள்
வியாபாரியை கத்தியால் குத்தி பணம் பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு.
நாகர்கோவிலில் வியாபாரியை கத்தியால் குத்தி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பருப்பு வியாபாரி பாலகுருசாமி (வயது 32) இவர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு பருப்பு விற்பனை செய்து வருகிறார் நேற்று முன்தினம் இவர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்திற்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார் ரயில் நிலையம் அருகே அவர் செல்லும்போது அவரை இரண்டு பேர் வழிமறித்து கத்தியால் குத்தினார்கள் அவரிடமிருந்த 3000 ரூபாய் ரொக்கப் பணம் செல்போன் ஆகியவைகளை அவர்கள் பறித்து சென்று விட்டனர் படுகாயமடைந்த பாலகுருசாமி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டாறு போலீசில் பாலகுருசாமி புகார் செய்தார் அதன் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுருசாமியை கத்தியால் குத்திவிட்டு பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேர்களை தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.