மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் மூன்று பெண்கள் பரிதாபமாக மூழ்கி இறந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் மூன்று பெண்கள் பரிதாபமாக மூழ்கி இறந்தனர். கொலையா தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் மூன்று பெண் பிணங்கள் இன்று மீட்கப்பட்டது காண்டூர் கால்வாயில் இருந்து அடித்து வரப்பட்ட இவர்கள் மூவரும் தாய் மகள் பேத்தி ஆக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் உயிரோடு கால்வாயில் மிதந்து வந்த இவர்கள் காப்பாற்றுங்கள் என அலறிய போதும் சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களை உடுமலை தீயணைப்பு படையினர் அணைப்பகுதியில் மீட்டனர். மீட்கப்பட்ட 3 பிரேதங்களும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இறந்துபோன மூவரும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.