BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளகாதலியுடன் வந்த நபர்.வெட்டி கொன்ற மனைவி.

கோவை சிங்காநல்லூரை அடுத்த காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (55). இவர் ஒரு தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி (50) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில், நாராயணசாமியின் மூத்த மகன் ராஜ்குமார் மனைவிக்கு நீலிகோணாம்பாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது நாராயணசாமி தந்து கள்ளகாதலியையும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ராஜேஷ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது மீண்டும் ராஜேஷ்வரி, ராஜ்குமார் ஆகியோர் நாராயணசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணசாமி, ராஜேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, ராஜ்குமார் இருவரும் வீட்டிலிருந்த கத்தியால் நாராயணசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, தகவலை தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ராஜ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
குடும்ப சண்டையில் தொழிலாளியை மனைவி, மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )