மாவட்ட செய்திகள்
உடுமலை உழவர் சந்தையில் அருகே உள்ள கிளை நூலகம் எண் 2 காம்பவுண்ட் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதை தவிர்க்க வாசகர்கள் கோரிக்கை.

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண்இரண்டில் போட்டித் தேர்வுகள் மற்றும் வாசகர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு நூலகத்தை தினசரி 100 நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு நூலகம் முன்புறம் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது அதே போன்று தற்போது நூலகத்தின் வடக்குப் பகுதியில் நூலகம் காம்பவுண்டைஒட்டி டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கான அடிப்படை பணிகள் நடந்து வருகிறது இதனால் வாசகர்கள் நூலகத்தை ஒட்டி வாகனங்கள் நிறுத்தி விட்டு படிக்கச் செல்வதற்கு சிரமம் ஏற்படும். மேலும் கட்டட உட்பகுதியில் புத்தகங்கள் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது எனவே நூலகப் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதை தவிர்த்து வேறு பகுதியில் அமைக்க நூலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
