BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் மாவட்ட மாநாடு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு ஊரகத் வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட மாநாடு தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர் சி. நல்லமுத்து தலைமை வகித்தார், முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன், மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், பொருளாளர் தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.மாநில பொது செயலாளர் ச.பாரி கலந்துகொண்டு பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் கொண்டு வர வேண்டும்.

முழு சுகாதார திட்ட வட்டார மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டமைக்கப்பட்ட பணியிடங்கள் அலுவலக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், பணி மேற்பார்வையாளர், நிலையில் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்,

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊராட்சியில் தனி அலுவலகம் ஒதுக்கித் தரவேண்டும்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணைத்தலைவர் தலைவர்கள் சிங்காரவேலு, வேலழகன், ஜீவானந்தம் மாவட்ட இணைச் செயலாளர்கள் வெங்கடகிருஷ்ணன், ஆனந்தன், அன்பரசன், மாவட்ட தணிக்கையாளர்கள் திருநாவுக்கரசு ,செந்தமிழ் செல்வி சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )