மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தஞ்சை களிமேடில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தஞ்சை களிமேடில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் விரைந்து வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கிய முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
தஞ்சை களிமேடு தேர் தீ விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பத்தாருக்கு இன்று ஆறுதல் கூறிய பொன்னம்பல அடிகளார், விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டவர்.
உயிரிழந்த 11 பேரின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விபத்து நடைபெற்ற தகவல் தெரிந்ததும் முதல்வர் விரைந்து வந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ளர்.
பாதிக்கப்பட்டோர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிட பிரார்த்தனை செய்வதாகவும், இது போன்ற சம்பவம் இனி நடைபெறக்கூடாது என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
