BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

களிமேட்டில் தேர்மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த இடத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

தஞ்சையை அடுத்த களி மேட்டில் கடந்த 27ஆம் தேதி சப்பரத்தில் மின்கம்பிகள் உரசி 11 பேர் உயிரிழந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு வரும் நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று காலை விபத்து ஏற்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தேரினை பார்வையிட்டு அப்புறம் இடத்தில் சென்று நிர்வாகிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

 

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் வராவிட்டாலும் முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டியது தார்மீக கடமை எப்படி தவறு நடந்தது என்று தெரியவில்லை இனிமேல் தவறு நடக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் இதில் முறையாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )