BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

11 பேரை பழிவாங்கிய தஞ்சாவூர் சப்பரம் விபத்திற்கு குற்றம் சாட்டியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா.

 

11 பேரை பழிவாங்கிய தஞ்சாவூர் சப்பரம் விபத்திற்கு அரசு அதிகாரிகள் காவல் துறையினரின் மெத்தன போக்கு தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா அஜாக்கிரதையாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் காவல் துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தஞ்சை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற சப்பரம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தேமுதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

 

பின்பு பேட்டி அளித்த அவர் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வாங்கவில்லை என அதிகாரிகள் கூறுவது தவறு அஜாக்கிரதையாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் அஜாக்கிரதை தான் காரணம்.

 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முடியும் எனவும் அரசு கொடுத்த நிவாரணம் போதாது உயிரிழந்த 11 பேர் குடும்பத்திற்கு தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )