BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி ஒன்றிய கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி:

திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை கிராமத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான இ.என்.கண்டிகை.ஏ.இரவி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசனி, மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருத்தணி நகர கழக செயலாளர் டி.செளந்தர்ராஜன், திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல், பள்ளிப்பட்டு ஒன்றிய கழக செயலாளர் டிடி.சீனிவாசன், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயலாளர் ஏஜி.ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், ஒன்றிய அவைத்தலைவர் என்.ஏ.குப்பன், ஒன்றிய பொருளாளர் கோ.தாமோதரன், மாவட்ட பிரதிநிதிகள் கருணாநிதி, செளமியா ராஜா, நிலவள வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், சுரேஷ், தாடூர் ரமணா, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆதித்யா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )