மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமிற்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார்.செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக்சந்திரகுமார் வரவேற்று பேசினார். முகாமில் மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கினார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
