மாவட்ட செய்திகள்
தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் ஜாமியா பள்ளிவாசலில் ரம்ஜான் ஈத் பெருநாளை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் ஜாமியா பள்ளிவாசலில் ரம்ஜான் ஈத் பெருநாளை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முத்தவல்லியும்,ஊர் தலைவருமான எஸ்.அன்சார்பாய் தலைமையில் குழு நிர்வாகிகள் காதர், மொம்மத்ஜான்,ஷபி,அப்சல்,சாதிக், இக்பால் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அப்போது தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய பொதுமக்களும் ஒற்றுமையுடனும்,நல்ல நட்புடனும், நல்லிணக்கத்துடனும்,நோய்,நொடியின்றி நலமுடன் வாழ்ந்திடவும்,வறுமை ஒழிந்து வளமுடன் வாழவும் வேண்டி எல்லாம் வல்ல இறைவனான அக்பர் அல்லாவிடம் பிரார்த்தனை செய்தனர்.இந்த பிரார்த்தனையில் மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சார்ந்த ஏராளமான இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.