மாவட்ட செய்திகள்
பேர்ணாம்பட்டில் அரசு விடுமுறையான ரமலான் பண்டிகையில் செயல்பட்ட இந்தியா ஷீ கம்பெனி!

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு சுமங்கலி டாக்கீஸ் பின்புறம் செயல்பட்டு வரும் இந்தியா ஷீ கம்பெனி அரசு விடுமுறை நாளான ரமலான் பண்டிகை நாளான 03 – 05-22 அன்று தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கம்பெனிக்கு வர வைத்து வேலை வாங்கியதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக அரசு விடுமுறை நாளில் கூட எங்களுக்கு ஓய்வு வேண்டாமா? என்று தொழிலாளர்களும் ,அரசு விடுமுறையில் வீட்டில் இருக்காமல் ஏன் வேலைக்கு போகிறாய் என்று ஷீ கம்பெனிக்கு போகும் மனைவிமார்களிடம், ஒரு சில கணவன்மார்கள் சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு இந்திய குடியரசு கட்சி நகர தலைவர் டாக்டர்.எஸ்.கதிரேசன், வேலூர் மாவட்ட கலெக்டருக்கு கைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு இதுகுறித்து வாய்மொழியான புகார் ஒன்றை கூறினார். அதற்கு கலெக்டர் தரப்பிலிருந்து இன்று வேலை செய்பவர்களுக்கு கூலி இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும், இன்று வேலை வாங்குவதற்கு பதிலாக வேறு ஒருநாள் தொழிலாளர்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் கூட இனிவரும் காலங்களில் அரசு விடுமுறை நாட்களில் ஷீ கம்பெனியில் வேலை வாங்க தொழிலாளர் துறை ஆய்வாளர் அனுமதி வழங்க கூடாது என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். அமைச்சரின் நடவடிக்கையை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
