BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னிவாடி அருகே உயிர் பலி அரங்கேற்றிய குட்டைக்கொம்பு ஒற்றை யானை.

வனத்துறையிடம் பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது.

வியூகம் அமைக்க முடியாமல் வனத்துறையும் திணறுகிறது

உயிர்பலி ஏற்படுத்திய குட்டைக்கொம்பு ஒற்றை யானை, 8 யானைகள் கொண்ட கூட்டத்துடன் இணைந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் வனத்தில் நடமாடுவது தெரியவந்துள்ளது. இச்சூழலில் கருப்பணசாமி கோயில், டி.எஸ்.பி., தோட்டம், நாயோடை நீர்தேக்கம் உள்ளிட்ட பகுதியில் விவசாய சாகுபடியை யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

அடர் வன எல்லையில் இருந்து சமதள பரப்பிற்கு வரும்போது ஒற்றை யானையை பிரித்து, பிடித்து செல்ல வனத்துறை காத்திருக்கிறது. ஆனால் அதற்கேற்ற வியூகத்தை உருவாக்கி செயல்படுத்த முடியாமலும் திணறுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )