மாவட்ட செய்திகள்
செங்கம் அருகே குடி இருக்கும் வீடுகளுக்கு போலி பட்டா தயார் செய்ததால் பாதிக்கப்பட்டோர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா, தீர்வு கிடைக்காவிட்டால பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்வதாக எச்சரிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுலம் பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு 2004ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் மூலம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

அன்று முதல் தங்கள் அனுபவத்தில் உள்ள வீடுகளை அதே பகுதியைச் சேர்ந்த தனி வட்டாச்சியர் அலுவலகத்தில் புரோக்கர் பணிசெய்யும் அண்ணாதுரை என்பவர் காலி செய்ய வேண்டும் என்றும் நீங்கள் வைத்திருக்கும் பட்டா செல்லாது என மிரட்டியும் குடியிருக்கும் வீட்டுக்கு போலி பட்டா வழங்கியதால் பாதிக்கப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் தீர்வு கிடைக்காவிட்டால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக எச்சரித்து வருகின்றனர்.


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பின்னர் தகவலறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
