மாவட்ட செய்திகள்
உடுமலையில் பன்றிகளால் சுகாதாரக் கேடுகள்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் மில்ஸ் பகுதியைச் சுற்றிலும் பன்றிகள் சுற்றி, சுற்றி வருகின்றன. பாலாஜி நகர், கங்காதரன் லேஅவுட், அன்னபூரணி நகர், நகராட்சி அலுவலர்கள் குடியிருப்பு, நெடுஞ்செழியன் காலனி உள்ளிட்ட பல குடியிருப்பு
பகுதிகளிலும் ஏராளமான பன்றிகள் சுற்றி வருகின்றன. இந்த பன்றிகளை ஒரு சிலர் பண்ணை அமைத்து வளர்த்து வருகிறார்கள் எனவும், அதுவும் குறிப்பாக சில நகராட்சி ஊழியர்களே உரிமையாளர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் வேதனையான உண்மை. #நகராட்சி சுகாதார பிரிவிற்கு இந்த உண்மைகள் தெரிந்தும் கண்டும் கானாமல் இருந்து வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

இந்த பன்றிகளால் பல இடங்களில் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே உடனடியாக இந்த பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
