BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய கோரி எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு !

வேலூரில் மதரீதியான வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமாக பதட்டமான சூழலை உண்டாக்கும் விதமாக செயல்பட்டு வரும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எஸ்பி அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோ தலைமையில் அக்கட்சியினர் ஒன்றிணைந்து மனு அளித்தனர். மனுவில் யூடியூப் சேனலில் நடித்துவரும் வீரமணி என்பவர் இந்து சனாதான சாஸ்திரங்களிலும், புராணங்களிலும்  சொல்லப்பட்டிருக்கிற கற்பனைக் கதைகளை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் நோக்கில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் . அவரைக் கண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் புகார் அளித்தனர் . புகார் அளித்துவிட்டு வீரமணி என்பவரை தமிழ்நாட்டில் நீ எங்கும் நடக்க முடியாது என்று மிரட்டி வருகிறார்கள் .அதேபோல் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இந்த அமைப்பினரின் இதுபோன்ற ஜனநாயகத்துக்கு எதிராகவும், பொது அமைதிக்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் அராஜக மதவெறி பாசிச போக்கிற்கு முடிவு கட்டும் வகையில் இந்து முன்னணியை தடை செய்ய வேண்டும். அதன் மாவட்ட தலைவராக செயல்படும் மகேஷ் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் சார்பில் மனு அளித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )